Monday, August 13, 2018

•உயிரே கடவுள்•


உடம்பானது உயிர் எடுத்து வந்ததா?

அல்லது உயிரானது உடம்பெடுத்து வந்ததா?

உடம்பு தான் உயிர் எடுத்ததென்றால், உடம்பும் உயிரும் கூடிய மனிதன் இறந்த பின்னும் அவன் உயிர் அழிவது இல்லையே. ஆகவே.....

இவ்வுடம்பு உண்மையல்ல, என்பதை உணர்ந்து,

உயிரை மெய் என்பதை அறிந்து,

உடம்பில் மெய்ப் பொருளாக உயிர் இருப்பதைக் கண்டு,

தன்னை மறந்த தியான நிலையிலே இருந்து,

உணர்ந்து கொள்வதே ஞானம்.

மனமெனும் எல்லையைக் கடந்து, ஏகமாக நின்று, எல்லாம் ஒன்றென உணரச்செய்வதே ஞானம்.

இவ்வுடலானது மண், நீர், தீ, காற்று, ஆகாயம் என பஞ்சபூதங்களால் அடுக்கடுக்கான ஆராதாரங்களாய் அமைந்து உள்ளது. தாயின் கருவினிலே புகும் விந்து ஒன்பது வாசல் கொண்ட உடலுயிர் வளர்ந்து இப்பூமியில் ஜனிக்கும். அப்படி வரும் கோடிக்கணக்கான உடல்கள் ஒவ்வொன்றினுள்ளும், உயிரே அதனுள் கடவுளாய் அமர்ந்துள்ளார் என  அறியுங்கள்.

ஆகாயமாய் நமக்குள் இருக்கும் மனம் எங்கும் பரவி ஓடிக் கொண்டிருக்கின்றது. அந்த மனத்தை குவித்து நம்முள் நினைவால் நிறுத்தி உயிரை நினைத்து, நோக்கி தியானம் செய்ய, மனத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி அது சுத்த நிர்மலமாய் ஆகும்.

பார்க்கும் இடமெலாம் நீக்கமற நிற்கும் உயிர் ஜோதியை தனக்குள்ளே கண்டு, உயிரான கடவுளை எப்போதும் கருத்தினில் வைத்து தியானியுங்கள், இறவாநிலை பெற அதுவே வழி காட்டும்.

இவ்வுடம்பை சுடுகாட்டில் வைத்து எரிக்கும் போது அது ஒன்றுக்கும் உதவாத ஒரு பிடி சாம்பலாகும். அது போல ஞானம் சிறிதும் இல்லா நெஞ்சம் உடையவர்களிடம் நல்லது ஒன்றும் இருக்காது. அறிவாக சுடர் விடும் உயிர் சோதியை அறிந்து அங்கேயே உன் உணர்வையும், மனதையும் நிலை நிறுத்தி தியானம் செய்து வந்தால் தேனில் ஒடுங்கியிருந்த ருசியானது நாவில் ஊறுவதுபோல், உயிர் கடவுள் அருளால் ஆனந்தம் கிடைக்கும்.

மாடமாளிகைகள் கட்டி, செல்வங்களையும் சம்பாதித்து, தம் மனைவி மக்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நாட்களில், திடீரென்று ஒரு நொடியில் உயிர் போனபின் அவ்வுடல் பிணமாக கிடப்பதைக் கண்டும், உயிர் போனதை உணர்ந்தும், இன்னமும் உயிரை அறியாமல் இருக்கின்றீர்கள். இவ்வுடலில் உயிராய் நின்று, ஆட்டுவித்த உண்மையை உணர்ந்து, இறவா நிலைபெற்று, இறைவனை சேர உயிர் தியானம் செய்யுங்கள்.
உயிரே கடவுள்...

லம்பிகா யோகம்
*******************

சித்தர்கள் ஜீவசமாதி அடைய மேற்கொண்ட வழிமுறை லம்பிகாயோகம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்!

மரணமில்லாமல் வாழ லம்பிகா யோகம்!

முற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் உயிரைப் பற்றியும், உடலைப் பற்றியும், இரண்டுக்குமிடையே உள்ள உறவு பற்றியும் தெரிந்து கொண்டார்கள்.

எப்போதும் இளமையாக வாழ இரசவாத முறை மூலம் பல மூலிகைகளை கண்டறிந்து காயகல்பம் என்ற மருந்துகளை தயாரித்து உண்டு நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள்.

மேலும் மரணத்தை வெல்ல பல்வேறு யோக வழிமுறைகளை கண்டறிந்தனர்.

அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்; துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக நட்புரிமையோடு அறிவுத் திறமையோடு வாழலாம்;
இன்னும் மரணமே இல்லாமலும் வாழலாம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள்.

அதுமட்டுமல்ல. விரும்பியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளைக் கற்பித்து வந்தார்கள்.
அப்படிப்பட்ட ஒருவகை யோகமே லம்பிகா யோகம் ஆகும்.

இதனை யோக நூல்கள் கேசரி_முத்திரை என்று அழைக்கின்றன.

உயிரினங்களில் சில இயற்கையாகவே லம்பிகா யோகம் என்பதை செய்து வருகின்றன.

பாம்பு, அரணை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வைத்து அடக்கிக் கொள்ளும்.

அந்த மாதிரி நிலையில் பல ஆண்டுகள் அப்படியே இருக்கும்.

அத்தகைய ஜீவன்கள் உணவு இல்லாதபோது அந்த நிலையை அடைந்தன. உணவு கிடைக்கிற வாசனை வந்தவுடன், தானாக பழைய நிலைக்கு வந்துவிடும்.

சித்தர்கள் இந்த லம்பிகா யோகத்தைச் செய்து, உயிர் போகாமல் தடுத்துக் கொண்டார்கள்.பல நூறு ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.தான் நினைத்தபோது உடலை நீக்கி இறைநிலை அடைந்தார்கள்.

இனி லம்பிகா யோகம் பற்றி விரிவாக காண்போம்.

ராஜ நாகம் நல்ல பாம்பு இவ்விரண்டு வகைப் பாம்புகளும்
புற்றுக்குள் நுழையும்போது தலையை வெளியே நீட்டிக்கொண்டு வால் பகுதியை முதலில் நுழைத்து
தலைகீழாக புற்றுக்குள் செல்லும்.

இவ்வாறு புற்றுக்குள் சென்றவுடன் அவைகளின் இரட்டை நாக்குகளில் ஒன்றை உள்நாக்கு வழியாக மேலண்ணத்தில் நுழைத்து உச்சந்தலையில் வைத்துவிட பசி தாகம்,குளிர்,மழை போன்றவற்றால் பாதிக்கப்படாமல் வாழும்.

ஊர்வனவற்றில் பாம்பு, அரணை, உடும்பு இவற்றுக்கு இரட்டை நாக்குகள் உள்ளன.

சாதகமான பருவநிலைகளை தோலின் உணர்வுகள் மூலம் அறிந்துகொண்டு மற்றொரு நாக்கின் மூலம் தலைக்குள் செலுத்திய நாக்கை எடுத்துக் கொண்டு உடல் உணர்வு நிலையடைந்து வெளியே வரும்.

இதேபோல சித்தர்களும் தங்கள் நாக்கின் அடிப்பாகத்தை
அறுத்துக்கொண்டு நாக்கின் நீளத்தை கூட்டி மேலண்ணத்தின் வழியாக தலையின் மேல்பகுதியில் கொண்டுவந்து,இடை பிங்களை என்ற இரு நாசிகளின் மூச்சை நிறுத்தி,நடுநாடி என்று அழைக்கப்படும்.
சுஷும்னா நாடி வழியே நாக்கை செலுத்தி கபாலத் தேன் என்று அழைக்கப்படும் புருவ மத்தியில் உள்ள பினியல் சுரப்பியின் திரவத்தை கட்டுப்படுத்தினால்

இவ்வுடல் மரணம் அடைவதில்லை

மூப்பு அடைவதில்லை,

என்றும் இளமையாக வாழலாம்.

ஜீவசமாதிநிலை அடையலாம்.

என்பதை அறிந்தார்கள்

"ஜீவன்" என்றால் உயிர்.

"சமாதி" என்றால் சமன் - ஆதி.

ஆதிக்குச் சமமாக மனம் நிலைபேறு அடையும் நிலையே ஜீவசமாதி.

சில யோகிகள் காடுகளுக்கு சென்று இலம்பிகா யோக நிலையில் அமர்ந்து விடுவார்கள்.

அவர்களது உடலில் கரையான்,மண் புற்றுகளால் மூடப்பட்டாலும் மரணமின்றி பல ஆண்டுகள் யோக நிலையில் அமர்ந்திருப்பார்கள்.

இந்த யோகத்தை தகுந்த குருவின் மூலம் தான் படிப்படியாக கற்க வேண்டும்.

காரணம் நாகங்களில் இரட்டை நாக்கு இருப்பதால் மேலே சென்ற ஒரு நாக்கை
இன்னொரு நாக்கால் இழுத்து விட்டுக் கொள்ள முடியும்.

ஆனால் மனிதர்களால் உட்சென்ற நாக்கை குரு அல்லது இன்னொரு நபர் தலையில் ஓங்கி வேகமாக அடித்தால்தான் சாதாரன நிலைக்குவரமுடியும்.

இந்த யோகத்துக்கு #சர்ப்ப_சாம்பவி_மகா_உபதேசம் என்று நாகாலாந்து யோகிகள் பெயர் சூட்டியுள்ளனர்.

லம்பிகா யோகம் பற்றிய சித்தர் பாடல்களை கீழே படித்துப்பாருங்கள்.

இடைக்காட்டு_சித்தர் பாடல் வரிகள்

"அண்ணாக்கை யூடே அமுதுண்ணேன்
மெய்ஞானம் ஒன்றன்றி வேறே ஒன்றை நண்ணேன்"-
இதன் பொருள்; நாக்கை நடு நாடியுள் செலுத்த கபாலத்தேன் சுரக்கும்.அதனைக் கட்டுப்படுத்தினால் மெய்ஞானம் பிறக்கும்.

சித்தர் சிவவாக்கியர் பாடல் வரிகள்

"ஆக்கை மூப்பதில்லையே யாதிகார ணத்தினாலே
நாக்கை மூக்கை யுள் மடித்து நாத நாடி யூடுபோய்
ஏக்கறுத்தி ரெட்டையு மிக்கழுத்த வல்லீரேல்
பார்க்கப் பார்க்க திக்கெல்லாம் பரப்பிரம்ம மாகுமே"

இதன் பொருள்;
*****************

நாக்கை இழுத்து வெட்டிவிட்டுக் கொண்டு
மேலண்னத்தில் மூக்கிற்கு உள் உள்ள குருநாடியுள் செலுத்தி
இடை பிங்களையாகிய வலது இடது நாசி சுவாசத்தை நிறுத்தி
நடுநாடியாகிய பிரம்ம நாடியுள் சுரக்கும் திரவ சக்தியை கட்டுப்படுத்த கற்றுக் கொண்டால் இவ்வுடம்பு மூப்பு அடைவதில்லை. வயோதிகம் அடைவதில்லை.எங்கும் நிறைந்த இறைவனை பார்க்கும் இடங்களில் எல்லாம் உணர்ந்தறியலாம்.

இந்த லம்பிகா யோகத்தை நன்கு கற்றுனா்ந்த குருமூலமாகவே முறையாக பயில வேண்டும் . மிகவும் ஆபத்தான யோக முறை.

*300 முதல் 480 வருடம் வரை பிரணாயாமம் மூலம் மனிதர்களால் உயிர் வாழ முடியும்: திருமூலர் கூறும் எளிய வழிமுறைகள்.!!!*

நாம் இடது நாசியில் 16 அங்குலமும், வலது நாசியில் 12 அங்குலம், சுழுமுனையில் 8 அங்குலம் என்று சராசரியாக நிமிடத்திற்கு 15 சுவாசங்கள் வீதம் நாள் ஒன்றுக்கு 21600 சுவாசங்களை நடத்துகிறோம்(இது சித்தர்கள் காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் சுவாசக் கணக்கு). சராசரியாக 12 அங்குலம் சுவாசம் வெளியேவிடுவதில் 4 அங்குலம் குறைந்து 7200 சுவாசம் நஷ்டமாகி 14400 சுவாசமே உள்ளடங்குகிறது என்கிறார்கள். இந்த நஷ்டக் கணக்கை சரி செய்யக் கண்டுபிடிக்கப்பட்ட வழியே பிராணாயாமம்.

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்கு
கூற்றை உதைக்குங் குறி அதுவாமே !

96 தத்துவங்களுக்குள் அடங்கிவிடுகிறான் மனிதன். அவை, அறிவு -1, குணம் -3,வினை -2,மண்டலம் -3, மலம் -3, தோஷம் -3, ஏசனை -3, கரணம் -4, பூதங்கள் -5, பொறிகள் -5, தொழில் -5, கோசங்கள் -5, நிலை -5, அவஸ்த்தை -5, புலன்கள் -5, கன்மேந்திரியம் -5, ஆதாரம் -6, தூண்டல் -8, நாடிகள் -10, காற்று -10 என்பனவாம்.

இதில் 10 காற்றுகளை(வாயு) தசவாயுக்கள் என அழைப்பர். அவை 1 பிராணன், 2 அபானன், 3வியானன், 4 உதானன், 5 சமானன், 6 நாகன், 7 கூர்மன், 8 கிருகரன், 9தேவதத்தன், 10 தனஞ்செயன் என்பனவாகும்.

மனித உடல்கள எதனால் இயக்கப் படுகின்றன? காற்றால்தான். இதையே ஒரு சித்தர் ''காயமே இது பொய்யடா ! வெறும் காற்றடைத்த பையடா !'' என்று உறுதிப் படுத்துகிறார்.

மனித உடல் முழுவதும் காற்றானது நீக்கமற நிறைந்து இயங்கியும், இயக்கியும் வருகின்றது.மனித இயக்கத்திற்கு ஆதார சக்தி காற்றுதான் என்று அனைத்து சித்தர்களுமே ஒப்புக் கொள்கிறார்கள். மனதை இயக்குவதும் சுவாசிக்கும் காற்றுதான். சித்தத்தின் சலனத்திற்கு காரணம் காற்றுதான்.

காற்றைக் கவனித்து தியானிப்பதே வாசியோகம் எனப்படும். அதாவது வாசியை கவனித்து அதனோடு ஒன்றுதல். வாசி என்ற சொல்லைத் திருப்பினால் சிவா அல்லவா, எனவே வாசியோகமே சிவயோகமாகும்.

தியானம் செய்ய சுத்தமான காற்றிருந்தாலே போதும் வேறென்ன வேண்டும் என்பார்கள். மூச்சு இல்லையேல் பேச்சு இல்லை. அதிகாலையில் தியானம் செய்வதன் சூட்சுமம் என்னவென்றால், அதற்கும் காற்றுதான் காரணம்.

சாதாரணமாக காற்றில் ஆக்ஸிஜன் இருக்கிறது. ஆனால் அதிகாலையில் அதோடுகூட ஓசோனும் சேர்ந்து கிடைக்கிறது. அப்போது அது அமிர்தக்காற்று எனப்படுகிறது. அமிர்தம் உண்ட பலன் அதற்கு உண்டு. அதாவது நீடித்த ஆயுள் அல்லது மரணமில்லா பெருவாழ்வு கிடைக்க உதவியாக இருக்கும். இந்த அமிர்தக் காற்றே தேவர்கள் சுவாசிக்கும் காற்று என்று சொல்லப்படுகிறது. அமிர்தக் காற்றில் பஞ்சபூத சக்திகள் நிரம்பித் ததும்பி வழிகின்றன.

சுவாசம்தான் மனிதனின் ஆயுளை நிர்ணயம் செய்கிறது என்பதைக் கண்டுபிடித்தவர்கள் சித்தர்களே.

ஒரு நாயானது ஒருநாளைக்கு 72000 தடவை சவாசித்து 14 வருடங்களில் மரித்துவிடுகிறது. குதிரையானது ஒருநாள் ஒன்றுக்கு 50400 தடவைகள் சுவாசித்து 30 லிருந்து 35 வயதுகாலம் வாழ்ந்து மரிக்கிறது. யானை 28800 தடவைமட்டுமே சுவாசிப்பதால் 100 வருடங்கள் வாழ்ந்து விடுகிறது. ஆமை ஒருநாள் ஒன்றுக்கு 7200 தடவைகள் மட்டுமமே சுவாசிப்பதால் 400 வருடங்கள் உயிர் வாழ்கிறது. பாம்புகள் அதையும் மிஞ்சி 4320 தடவைகள் மட்டுமே சுவாசித்து சுமார் 500 முதல் ஆயிரம் வருடங்கள் கூட உயிர் வாழ்வதாக சொல்லப் படுகிறது.

மனிதனுக்கு விதிக்கப்பட்ட சுவாசமாக சித்தர்கள் குறிப்பிடும் எண்ணிக்கை 21600 ஆகும். அப்படி சுவாசிக்கும் மனிதன் 120 ஆண்டுகள் உயிர் வாழலாம் என்கின்றனர். அதே சுவாசத்தை உற்று கவனித்து இழுத்து நிதானமாக மூச்சுவிட பழகிக் கொண்டால் ஆயுளை அதிகரிக்கலாம் என்கின்றனர். உதாரணமாக 10800 தடவைகள் நிதானமாக நன்றாக மூச்சுவிட பழகிவிட்டான் என்றால் 240 ஆண்டுகள் உயிர் வாழலாம். 5400 தடவையே நாள் ஒன்றுக்கு சுவாசிப்பவன் 480 ஆண்டுகள் உயிர் வாழலாம் . இதையே திருமூலர் சித்தர்

''காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்கு
கூற்றை உதைக்குங் குறி அதுவாமே!''

என்று குறிப்பிடுகின்றார். நமது சரீரம் அல்லாது மேலும் நான்கு சூக்கும சரீரங்கள் நமக்கு உண்டு என்று சித்தர்கள் கூறுகிறார்கள். ஆக மொத்தம் ஐந்து. அன்னமய கோஷம் -இது நம் தூல தேகமாகும். பிராணமய கோஷம் - பிராணனும், கர்ம இந்திரியங்களும் கூடி நிற்பது. மனோமய கோஷம் - மனமும், கர்ம இந்திரியங்களும் கூடி நிற்பது. விஞ்ஞானமய கோஷம்- புத்தியும், ஞானேந்திரியங்களும் கூடி நிற்பது. ஆனந்த மய கோஷம் - பிராணவாயுவும், சுழுத்தியும் கூடி நிற்பது.

பஞ்சபூத சக்தியாலும், அன்னத்தாலும் நரம்பு, தோல், இரத்தம், மாமிசம், நகம், ரோமம், சுக்கிலம் ஆகிய தாதுக்களால் ஆன தூல தேகமே அன்னமய கோஷம். அந்தக்கரணம், ஞானேந்திரியங்கள், பிராணாதிகள், கர்மேந்திரியங்கள் போன்றவற்றின் சேர்க்கையே சூக்கும சரீரங்களாகிய பிராணமய கோஷம், மனோமய கோஷம், விஞ்ஞானமய கோஷம் என்ற மூன்றும்.

நம் தூல சரீரத்தின் மெய், வாய், கண், மூக்கு, செவி என்கிற அறிவுக் கருவிகளான ஞானேந்திரியங்களையும், வாக்கு, பாதம், பாணி, பாயுரு, உபதம் என்கிற கர்மேந்திரியங்களையும் இயக்குவது பிராணனே. நாம் தூங்கினாலும், விழித்திருந்தாலும் நம் இதயத்தை இயங்கச் செய்வதும், இரத்த ஓட்டத்தை தடையில்லாமல் நடைபெற வைப்பதும், நுரையீரலை இயக்கி மூச்சை முறைப்படி நடத்துவதும் பிராணனே. இப்படி உடலின் சகல உள்வெளி இயக்கங்களுக்குக் காரணமாக இருக்கும் பிராணனே பிராணமய கோஷம். அன்னமய கோஷத்தைக் கலந்து பரவி தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கிறது பிராணமய கோஷம், அன்னமய கோஷத்தின் ஆத்மா பிராணமய கோஷம். இந்த அன்னமய கோஷத்தை விட்டு உணர்வை உள்நிலைப்படுத்துபவன் பரம்பொருளே. தான் இந்த உடம்பு இல்லை என்கிற மெய்யுணர்வு வளர்ச்சிக்கு நுட்பமாக உடம்பினுள்ளும் வேறாகி நிற்கும் பிராணமய கோஷம் காரணமாகிறது.

சித்தர்கள், மகான்கள், யோகிகள் தங்கள் உடலை மாயமாக்கி மறையும் சித்துக்கு அன்னமய கோஷம் பிராணமய கோஷத்தில் அடங்குவதுதான் காரணம்.

சித்துக்களைக் கடந்து, அதற்கு மயங்காதவர்கள் பிராணமய கோஷத்தையும் கடந்து உணர்வை உள்ளே செலுத்த மனோமய கோஷம் ஆட்கொள்கிறது. மனிதனுக்கு எது சரி, எது உணமை என்பதைத் தெளிவுபடுத்துவதே மனோமய கோஷம் தான். மனம் அழிந்து உணர்வு தலைதூக்குமிடம் விஞ்ஞானமய கோஷம். நம் பாதை சரிதானா ? என்ற கேள்வியோடு இலட்சியத்துக்கான முடிவு எடுக்கப்படுவது விஞ்ஞானமய கோஷத்தினால்தான். விஞ்ஞானமய கோஷத்தை எட்டுபவர்களுக்கே உள்ளும் புறமும் ஜோதியைக் காண வாய்ப்பு கிடைக்கும். நாம் எடுக்கும் முயற்சியின் வெற்றியின் மகிழ்ச்சியை உணரும் இடமே ஆனந்தமய கோஷம். யோகத்தின் எட்டு நிலைகளையும் கடந்தவர்களுக்கே ஆனந்தமய கோஷத்தை அனுபவிக்க முடியும்.

இந்திரியங்களைக் கட்டி மனத்தை வென்று நம் உடலில் உயிராய் கலந்து நிற்கும் இறைவனை உணர்ந்து, கலந்து, இன்புற்று இருக்கும் நிலையே ஆனந்தமய கோஷத்தில் உணரப்படுகிறது. இந்த கோஷங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டது ஆன்மா. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது மனம் உள்ளே ஒடுங்க ஒடுங்க உணர்வுகள் ஒடுங்குகின்றன. உணர்வுகளின் ஒடுக்கமே சமாதி நிலை. இவ்வளவும் பிராணனின் கைவல்லியத்தால்தான் விளைகிறது.

                  

Friday, August 10, 2018

TANTRA-தந்திரம்

SEVEN CHAKRAS सात चक्र ஏழு சக்கரங்கள்
------------------------------------------------
MULADHARA }}}}}}} 1 {{{{{{{ மூலாதாரம் :
------------------------------------------------
இன்பம் விளங்கும் மூலாதாரத்தில் வாசம் செய்யும்
வாலைப் பெண் தன் நிகரற்ற நாயகி குண்டலினி சக்தி !
வாலையின் யந்திரம் - முக்கோண பீடம்
வாலையின் மந்திரம் - அ+உ+ம் , ம்+உ+அ.
--------------------------------------
வாலைசக்தி :வாலைக் கும்மி :
--------------------------------------
"வாலையின் அட்சரம் மூன்றாகும் அதை
வாய் கொண்டு சொல்பவர் யார் காணும்
மேல் ஒன்றும் கீழ் ஒன்றும் மத்திமமுங்கூட்டி
விரைந்து பாரடி ஞானப் பெண்ணே.!"
- வாலைக் கும்மி -
வாலையின் யந்திரம் - முக்கோண பீடம்
வாலையின் மந்திரம் - அ+உ+ம் , ம்+உ+அ.
இன்பம் விளங்கும் மூலாதாரத்தில்
வாசம் செய்யும் வாலைப் பெண்
தன் நிகரற்ற நாயகி குண்டலினி சக்தி !
வாலையின் மூன்றெழுத்தான அட்சரங்கள்
"ஐம் கிலீம் சௌம்" என்ற பிஜாட்சரங்கள் !
வாலையின் அட்சரம் மூன்றாகும்
வாலையின் மந்திரம் அ+உ+ம் என்னும்
ஓங்கார அட்சரங்களும், அதை மாற்றி வரும்
ம்+உ+அ ....ஆக..வாலையின் அருள் கிடைக்க,
ஓம் என்ற அட்சரம் தானுண்டு !
---------------------------
பாலாதிரிபுர சுந்தரி :
---------------------------
பாலாம்பிகையான வாலையை
அனைத்துக்கும் ஆதாரமானவள்.
இந்த ஆதார சக்தியினை வழிபட
அகாரம், (சிகாரம்) உகாரம், மகாரம்
என்ற மூன்றேழுத்து ஓங்கார மந்திரமே
மூல மந்திரமாகும்.
வாலையை தங்கள் உடலில் இனங்கண்டு,
இந்த ஓங்காரத்தின் உட்பொருளை உணர்ந்து
அதன் வழி நின்று சித்தியடைவதுதான்
வாலைபூசையின் நோக்கம்.
இந்தஅம்சம் பத்து வயதுக்குறிய ஒரு
சின்னஞ் சிறிய பெண்ணின் அம்சம்
இந்த உயர் தெய்வத்தைப் பற்றி
கொங்கணவர் பின்வருமாறு கூறுகிறார்.
"வாலையைப் பூசிக்க சித்தரானார்
வாலைக் கொத்தாசையாய் சிவகர்த்தரானார்
வேலையைப் பார்த்தல்லோ கூலி வைத்தார்
இந்த விதம் தெரியுமோ? வாலைப் பெண்ணே!"
சித்தர்கள் வணங்கிய அந்த பால தெய்வத்தின் பெயர் வாலை.
ஆதி சக்தியின் பத்து வயது பெண் வடிவமே இந்த வாலை. அனைத்திற்க்கும் ஆதி காரணமான இந்த வாலை தெய்வம்
நமது உடலில் இருந்து இயங்குவதை உணர்ந்து கொண்டு,
சின்னஞ்சிறு பெண்ணான வாலையின் அருளால் சித்தியடைந்து, பின் அவளை கண்ணித் தெய்வமாக வழிபட்டு படிப்படியாக மனோன்மணித் தெய்வமாக பூசை முடித்து, இறுதியில் ஆதிசக்தியின் அருள் பெற்று முக்தி நிலையான மெய்ஞான நிலையினை அடைந்தனர். இதுவே ஞானத்தின் அதி உயர் நிலை. இந்த நிலை எய்தியவர்களே சித்த புருஷர்கள்.
-----------------------------------------
வாலை பூசை என்பது என்ன?
-----------------------------------------
இதன் அருமையினை அகத்தியர்
பின் வருமாறு விளக்குகிறார்
"கூடப்பா துரியமென்ற வாலை வீடு
கூறரிய நாதர் மகேச்சுவரியே யென்பர்
நாடப்பா அவள் தனையே பூசை பண்ணு
நந்திசொல்லும் சிங்காரம் தோன்றும் தோன்றும்
ஊடப்பா சிகாரவரை எல்லாம் தோன்றும்
ஊமையென்ற அமிர்தவெள்ளம் ஊறலாகும்
தேடப்பா இது தேடு காரியம் ஆகும்
செகத்திலே இதுவல்லவோ சித்தியாமே
வாமென்ற அவள் பாதம் பூசை பண்ணு
மற்றொன்றும் பூசை அல்ல மகனேசொன்னேன்!"
"மனமு மதியு மில்லாவி டில்வழி
மாறுதல் சொல்லியே யென்ன செய்வாள்
மனமுறுதியும் வைக்க வேணும் பின்னும்
வாலை கிருபையுண்டாகவேணும்"
வாலைசக்தி தெய்வத்தைப் பற்றி
கருவூரார் தனது கருவூரார் பூஜாவிதி
என்னும் நூலில் பின்வருமாறு கூறுகிறார்.
"பத்து வயதாகும் வாலையவள்
மர்மம் வைத்து பூசை பண்ண
மதியுனக்கு வேணுமடா அதிகமாக
கனரிது சிறு பிள்ளை கன்னி கன்னி
ஆமிவளை அறிந்தவர்கள் சித்தர் சித்தர்
அறிந்ததுமே மன அடக்கம் வந்து சேரும்
நாட்டிலே சொன்னாயானால் நகைப்பர்"
----------
படங்கள் :
----------
1 - வாலை சக்தி - Vaalai Sakthi
2 - திரிபுரதியானம் - Thiripura Dhyanam
3 - ஸகலஹ்ரீம் - sakalahrim
Shiva Raja yogi Dr.Suresh
Cell:+91 98843 80229